×

மருத்துவக் கருக்கலைப்பு (திருத்தம்) மசோதா, 2020

மருத்துவக் கருக்கலைப்பு (திருத்தம்) மசோதா, 2020

மருத்துவக் கருக்கலைப்பு (திருத்தம்) மசோதா, 2020

மருத்துவக் கருக்கலைப்பு (திருத்தம்) மசோதா, 2020 
(Medical Termination of Pregnancy (Amendment) Bill, 2020)
 • "கர்ப்பத்தின் மருத்துவ முடிவு (திருத்தம்) மசோதா, 2020" க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • இந்த மசோதா"கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம், 1971"ஐ திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • தற்போதுள்ள20 வாரங்களிலிருந்து 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க இந்த மசோதா முன்மொழிகிறது.
 • பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இளவயதுடையவர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிற பெண்களை உள்ளடக்கிய சிறப்பு வகை பெண்களுக்கு இந்த நீட்டிப்பு பொருந்தும்.
 • இந்த மசோதா பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகளுக்கான பெண்களின் அணுகலை அதிகரிப்பதற்கான ஒரு படியாகும்.
 • இந்த திருத்தங்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முன்மொழிந்தது.
 • பெண்களுக்கு தங்கள் விருப்பப்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் இனப்பெருக்கம் சார்ந்த சுதந்திரத்தை இந்தச் சட்டம் அளிக்கும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.
 • இதே மத்திய அரசு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் கருக்கலைப்பு செய்யும் உச்சவரம்பை கூட்டுமாறு வந்த வழக்கில் பதிலளிக்கும் முகமாக,'நாட்டில் பிறக்க இருக்கும் ஒவ்வோர் உயிரையும் காப்பாற்றும் கடமை அந்த நாட்டின் அரசுக்கு உண்டுஎன்றது. 
சாதகங்கள்: 
 • 1971-ம் ஆண்டு மருத்துவரீதியான கருக்கலைப்பு சட்டத்தை இந்தியா கொண்டுவந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் இந்திய கிரிமினல் சட்டப்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாகக் கருதப்பட்டு மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை/அபராதம் வழங்கப்பட்டு வந்தது. கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்க வழி இருந்தது. அப்போது வந்த இந்தப் புதிய சட்டம், மருத்துவரீதியான காரணங்களுக்காகவும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தான சூழலிலும், பிறக்க இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தாலோ, பாலியல் வன்முறை போன்ற நிகழ்வுகளால் ஏற்பட்ட கர்ப்பமாக இருந்தாலோ 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம் என்று அறிவித்தது.
 • இந்தச் சட்டத்தின்படி, பதிவு பெற்ற மருத்துவரே கருக்கலைப்பு செய்ய முடியும். 12 வாரங்களுக்குள் என்றால் ஒரு மருத்துவரே முடிவு செய்து கருக்கலைப்பு செய்யலாம். 12 முதல் 20 வாரங்களாக இருந்தால் இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.
 • ஒரு வருட பயிற்சி முடித்த மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறியல் நிபுணரால் அல்லது குறைந்தது 25 கருக்கலைப்புகளுக்கு மற்றொருவருக்கு உதவியவர் மட்டுமே கருக்கலைப்பை செய்ய முடியும் என்று, மத்திய சுகாதார அமைச்சகத்தின் 2003 வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
 • இதுபோன்ற வரைமுறைகள் வகுக்கப்பட, தொடர்ந்து வந்த நாள்களில் அதிகமான கருக்கலைப்பு செய்யப்பட்டன. இருப்பினும் நாட்டில் நடந்தகருக்கலைப்புகளில் 60% பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளாகஇருந்தன. பதிவு பெறாத போலி மருத்துவர்கள், ஊர்ப் பாட்டிகள் போன்றோரிடம் கருக்கலைப்பு செய்து, அதனால் கர்ப்பப்பையில் கிருமித்தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் அதிகமாக இருந்தனர்.நாட்டில் நடக்கும் கர்ப்பிணித் தாய் மரணங்களுள் 9% மரணங்கள்இதுபோன்ற பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடவடிக்கைகளால் நடப்பவை என்று அறியப்பட்டது.
 • இதனால் பெண்கள் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உதவியை அடையும் பொருட்டு,முதல் சட்ட திருத்தம் 2002-ம் ஆண்டுகொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அந்தந்த மாவட்டத்திலேயே ஒரு மருத்துவக்குழு அமைத்து, தகுதியான தனியார் க்ளினிக்குகளை தேர்வு செய்து, அங்கும் கருக்கலைப்பு நடைபெறலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு சுமை குறைய, மேலும், தனியாரில் கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்புவோர் அங்கு சென்று சேவையைப் பெற்றார்கள்.
 • மருத்துவத் தகுதி இல்லாமல் கருக்கலைப்பு செய்பவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் கடுமையாக்கப்பட்டது.
 • முந்தைய சட்டத்தில் இருந்த'lunatic'என்ற வார்த்தை'mentally Ill person'என்று மாற்றப்பட்டது. மனநலம் குன்றிய பெண்களுக்கும் கருக்கலைப்பு சேவை கிடைத்திடச் செய்வது இந்தச் சட்ட திருத்ததின் நோக்கமாக இருந்தது.
 • அடுத்த சட்ட திருத்தம் 2003-ம் ஆண்டுசெய்யப்பட்டது. அதில் கருக்கலைப்பு சட்டத்தை அமல்படுத்துவதைக் கண்காணிக்கும் மாவட்டக் குழுவில் அங்கம் பெறவேண்டியவர்கள் யார் யார் என்பது குறித்தும், கருக்கலைப்பு நடக்கும் இடங்களில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச வசதிகள், கருக்கலைப்பு செய்யும் தனியார் கிளினிக்குகளை மாவட்டக்குழு எத்தனை நாள்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்றெல்லாம் மேற்கோள் காட்டப்பட்டன.
 • இவையனைத்தும் மகளிர் நலன் கருதி, அவர்களின் இனப்பெருக்கம் சார்ந்த சுதந்திரத்தைக் காக்கவும், கருக்கலைப்பை ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் செய்துகொள்ள வேண்டும் என்பதை மனதில் வைத்தும் செய்யப்பட்ட மாற்றங்கள்.
 • பிறகு, 2014-ம் ஆண்டு ஒரு சட்டத் திருத்த மசோதாமுன்மொழியப்பட்டு நிலுவையில் விடப்பட்டது. அந்த மசோதாவில், இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் கருக்கலைப்பு உச்சவரம்பும் இருந்தது. மேலும், கருக்கலைப்பு யாரெல்லாம் செய்யலாம் என்ற வரையறையில், பயிற்சி பெற்ற நவீன முறை மகப்பேறு மருத்துவர்களுடன் சேர்ந்து ஹோமியோபதி, ஆயுர்வேதா போன்ற இந்திய மருத்துவ முறை மருத்துவர்களும் செவிலியர்களும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். இதை நவீன மருத்துவர்கள் எதிர்த்தனர். இது பெண்களின் ஆரோக்கியத்துக்கு எதிராக அமையும் என்பது அவர்கள் முன்வைத்த கருத்து. அதே சமயம் கருக்கலைப்பு செய்யும் உச்சவரம்பை உயர்த்தியதற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இருப்பினும் பல காரணங்களால் 2014-ம் ஆண்டு அந்த மசோதா சட்டம் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது.
 • இருப்பினும் அந்தச் சட்டத் திருத்தத்துக்கான தேவை இருக்கிறது என்பதை, இந்திய சட்டத்துறை அதற்குப் பிறகு சந்தித்த பல வழக்குகள் நிரூபித்துக்கொண்டே இருந்தன.
 • சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் அதனால் உருவான கருவை கலைக்க 20 வாரங்களைக் கடந்துவிட்டதால் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, நீதிபதி இந்தச் சட்டத்தைக் காரணம் காட்டி கருவை கலைக்க அனுமதிக்காதது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இவ்வாறு, 20 வாரங்களைக் கடந்த கருவைக் கலைக்க நியாயமான தேவைகள் இருந்தும் இந்தச் சட்டம் அவற்றைத் தடுத்து வந்தது.
 • இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்புகள், ஒரு இளம் பெண்ணின் ஆரோக்கியத்திற்கு பிரசவத்தால் ஏற்படும் தீங்கை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.உலகளவில் 15 முதல் 19 வயதுள்ள சிறுமியருக்கு பிரசவத்தால் ஏற்படும் சிக்கல்கள் தான், மரணத்திற்கு முக்கிய காரணம் என்று, பிப்ரவரி 2018 உலக சுகாதார அமைப்பின் அறிக்கைதெரிவித்தது.
 • ஒரு சிசு கர்ப்பத்தில் வளர்ந்துகொண்டிருக்கும்போது ஏற்படும் குறைபாடுகளை 20 வாரத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் மூலம் கண்டறிந்து, அதை உறுதிசெய்ய பனிக்குட நீர் பரிசோதனை, மரபணு பரிசோதனை போன்றவற்றை எடுத்துப் பார்க்க மேலும் ஒன்றிரண்டு வாரங்கள் ஆகிவிடும். ஒரு சிசு 22-23 வாரங்களில் தீவிர பிறவிக் குறைபாடு கொண்டது என்று கண்டறியப்பட்டாலும், இப்போது இருக்கும் சட்டப்படி தாய்க்கு அந்தக் குழந்தையைக் கலைக்கும் அதிகாரம் இல்லை. இந்தச் சட்டத் திருத்தம் இப்போது அந்தச் சுதந்திரத்தை தாய்க்கு வழங்கும்.
 • இதயம் மற்றும் மூளை சார்ந்த பிறவிக் குறைபாடுகள் ஸ்கேனில் 22 வாரங்களுக்குப் பிறகே, நன்றாகத் தெரியும் என்பதால் மகப்பேறு மருத்துவருக்கு கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் கிடைக்கும். இது சிசுவின் நலனுக்கு நல்லது. நல்ல நிலையில் உள்ள சிசுக்கள் முன்கூட்டியே கருக்கலைப்பு செய்யப்படுவதை இது தடுக்கும்.
பாதகங்கள்:
 • இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இருந்த பழைமையான கருக்கலைப்பு முறைகள் வழக்கொழிந்து, இப்போது நவீன மருத்துவம் முன்னேறிவிட்டதால் கர்ப்பகாலத்தின் எந்த நிலையிலும் கர்ப்பத்தை தடை செய்ய முடியும். 20 வாரத்தை 24 வாரங்களாக மாற்றியிருப்பதில் தாய்க்கு உடல் சார்ந்த ஆபத்து இல்லை என்று ஒரு பக்கம் தெரிந்தாலும், மறுபக்கம் இரண்டாவது மும்மாதத்தில் செய்யப்படும் கருக்கலைப்பு ஆபத்தானவை என்றும், அதைச் செய்ய அதீத அனுபவம் தேவை என்றும் சில மகப்பேறு நிபுணர்கள் கருதுவதை புறந்தள்ளி விடமுடியாது.
 • இந்த உச்சவரம்பு ஏற்றத்தின் முக்கிய பாதகமாக பல மருத்துவர்கள் கருதுவது,'பாலினம் சார்ந்த கருக்கொலையை இந்தச் சட்டத் திருத்தம் அதிகமாக்கிவிடக்கூடும்'என்பதுதான். ஏற்கெனவே பாலினம் சார்ந்த கருக்கொலைகளுக்கு ஸ்கேன் செய்வதும் கருக்கலைப்பு சட்டமும் ஓரளவு துணை நிற்பதுபோல தெரிவதுண்டு. இப்போது உச்சவரம்பை நீட்டுவதால் வரும் பிரச்னை யாதெனில், சிசுவின் பாலினத்தைக் காட்டும் ஆண் மற்றும் பெண் குறிகள் 23வது வாரத்தில் நன்றாக ஸ்கேனில் தெரியும். எனவே பாலினத்தை அறிந்து கருக்கொலை செய்வதற்கு ஏதுவாக இந்த சட்டம் அமையும் வாய்ப்பு இருக்கிறது. 
 • முறையான அனுபவம் இல்லாதவர்கள் 20 முதல் 24வது வார கருக்கலைப்பில் ஈடுபட்டால் கர்ப்பப்பையில் ஓட்டை போட்டுவிட வாய்ப்பு உண்டு. கர்ப்பப்பையைக் கிழித்துவிடவும் வாய்ப்புள்ளது. இதனால் கர்ப்பிணித் தாய் மரணம் அடையும் சோகமும் நேரலாம்.
 • இந்தச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சட்டமாகி அமல்படுத்தப்படுமாயின் கருக்கலைப்புக்கு உண்மையான தேவையுள்ள பெண்களுக்கு பயன்தருமாறும், பாலினம் சார்ந்த பெண் கருக்கொலைகளுக்குத் துணை போகாதவாறும் அமல்படுத்திட வேண்டியது அவசியம்.

மருத்துவக் கருக்கலைப்பு (திருத்தம்) மசோதா, 2020