×

இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு

இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு

இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு

இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு:

இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (Indian Regional Navigation Satellite System (IRNSS)) அல்லது ஆங்கிலத்தில்நேவிக்(NAVIC)என்பது இந்தியப் பகுதிக்காக தற்சார்பு இடஞ்சுட்டி அமைப்பை உருவாக்கும் பொருட்டு ஏழு செயற்கைக்கோள்களை புவி ஒத்திணைவு வட்டப்பாதையில் செலுத்தும் திட்டமாகும். 

இந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. 

இந்திய அரசின் முழுமையான கட்டுபாட்டின் கீழ் இத்திட்டம் நடைபெறுகிறது. அமெரிக்காவின் இடஞ்சுட்டி வசதியை கார்கில் போரின் போது பயன்படுத்தியதில் ஏற்பட்ட சிரமங்களின் காரணமாக இத்திட்டம் திட்டமிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்படுகிறது.

NavIC (Navigation with Indian Constellation) 

இந்தத் திட்டத்தின்படி மொத்தம் இரண்டு பாகங்களாக இந்த அமைப்பு செயல்படும். Space Segment மற்றும் Ground Segment.மொத்தம் 7 செயற்கைக் கோள்களுடன் Space Segment-ம், 21 நேவிகேஷன் மையங்களுடன் Ground Segment-ம் செயல்படும். 

`IRNSS-1' ( Indian Regional Navigation Satellite System) என்ற பெயரில் A, B, C என வரிசைப்படுத்தப்பட்ட ஏழு செயற்கைக் கோள்கள் 2011-ம் ஆண்டிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டு வந்தன. 

இந்த ஏழு செயற்கைக் கோள்கள் தரும் தகவல்களை ஒழுங்கு படுத்தவும், செயற்கைக் கோள்களைக் கண்காணிக்கவும் IRNSS Range And Integrity Monitoring System, IRNSS CDMS Ranging Station, IRNSS Spacecraft Control Facility, IRNSS Network Timing Facility மற்றும் IRNSS Navigation Centre என்ற ஐந்து மையங்கள் கொண்ட அமைப்பை இந்தியா முழுவதும் நிறுவியுள்ளது இஸ்ரோ. 

இவையனைத்தும் சேர்த்து Ground Segment ஆக செயல்படும். இவற்றுள் Navigation Centre தான் இவற்றுக்குத் தலைமையகமாகச் செயல்படும். Range and Integrity Monitoring என்ற வரையறைகளைக் கண்காணிக்கும் மையங்கள் மட்டும்இந்தியாவில் 15 இடங்களில்அமைக்கப்பட்டுள்ளன.இந்தியாவைத் தவிர மொரீஷியஸில் ஒரு மையமும் இந்தோனேஷியாவில் பியக் தீவில் ஒரு மையமும் அமைக்கவிருக்கின்றனர்.

தலைமையகம்:

இரண்டு இடங்களில் தலைமையகத்தை அமைத்திருக்கிறது இஸ்ரோ.பெங்களூருவில் முதல் தலைமையகமும் லக்னோவில் இரண்டாவது தலைமையகத்தையும்அமைத்துள்ளனர்.

இந்திய எல்லையைக் கடந்து1,500 கிலோ மீட்டர்தூரம் வரைNAVICசெயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சேவையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பிரபல புராசஸர் தயாரிக்கும் நிறுவனமான குவால்கமுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது இஸ்ரோ. அதிகமான மக்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்பதால் முதலில் பட்ஜெட் மொபைல்களில் இந்த சிப்பைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஆர்என்எஸ்எஸ்ஸின் சில பயன்பாடுகள்:

  • நிலப்பரப்பு, வான்வழி மற்றும் கடல் ஊடுருவல் (Terrain, aerial and ocean navigation)
  • பேரிடர் மேலாண்மை (Disaster management)
  • வாகன கண்காணிப்பு மற்றும் கடற்படை மேலாண்மை (Vehicle Surveillance and Fleet Management)
  • மொபைல் போன்களுடன் ஒருங்கிணைப்பு(Integration with mobile phones)
  • துல்லியமான நேரம் (The exact time)
  • மேப்பிங் மற்றும் ஜியோடெடிக் தரவு பிடிப்பு (Mapping and geodetic data capture)
  • மலையேறுபவர்களுக்கும் பயணிகளுக்கும் நிலப்பரப்பு வழிசெலுத்தல் உதவி (Terrain navigation assistance for mountaineers and travelers)
  • இயக்கிகளுக்கான காட்சி மற்றும் குரல் வழிசெலுத்தல் (Display and voice navigation for drivers)

இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு